வானுள் நிலாஒளிர் வாய்...தூவ, 'பூ' கிறங்க; தேனுள் இசைசுவை தென்றல் இதென-ZEE தமிழ்அரங்குள் யோகசிறீ தாரகை சொலித்தாள் அமிழ்தபண் ஆகாயம் தொட்டு. ஆகம தடைதாண்டி அற்புத தேன்இசை மேகங்கள் தீண்டி மெளனம்பொழி மின்நிலவு ஆகாயம் நாணும் அதிசய பண்தமிழே யோகசிரி உன்பாஎன் வெண்பா! காண்உள்ஓர் பூமேல் கவிழ்கரு வண்டுநோக்கி மான்உள் முயங்கும் மயங்கும் விழிஅந்த தேன்உள் உலாவும் திரண்ட கனிஇசைஉன் ஊண்குரல் ஒன்ற தமிழ்! ragupathiboominathan - Face book யோக ஸ்ரீ கருர் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்காங்க அங்க இருக்க கூடிய ஒரு அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறாங்க. அப்பா டைல்ஸ் ஓட்டும் வேலை அம்மா பஞ்சுமில்ல வேலை மூன்று பெண் குழந்தை ஒரு ஆண் ஆண் குழந்த குடும்பத்தின் முதல் குழந்தை இவர்... இரண்டாம் வகுப்பு படிக்கும் போது இவரின் குரல் வளத்தை அறிந்த பள்ளி ஆசிரியர் இந்த பொண்ணுக்கு பயற்சி அளித்து இன்று Zதமிழ் சரிகமபவில் வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளார். ஒரு ஆசிரியர் என்பதையும் தாண்டி ஒரு மாணவியின் தனித் திறமைக்காகவும் சேர்த்து போராடி உள்ளார். வெற்றி தோல்வி என்பது பிறகு இத்தனை ஆண்டுக...
Comments
Post a Comment