வேடனுக்கு... திராவிட அன்னை தமிழ் வாழ்த்து பா... பூமாலை! (மாலை - 1)
ஆம். வலியின் சுமை. செய்திகளை உலகிற்கு சொல்ல நல்ல வழி
" விதைகள் எங்கும் விதைக்கப்பட்டுள்ளன" வளர்ப்பு அப்படி. "அவன் ஒரு தீ தான்"
கோங்கிறிற் வனத்தின் ஓரத்திலே
நவீன அடிமைகள் வாழும்
நரகம் போல் ஓரிடத்திலே
என்னை பெற்றாளே கல்லு போல ஒருத்தி
அவளை "யாழப்பாந்தில்" இருந்து யாரோ துரத்தி
அவளின் உதிரத்தில் இருந்து உருவெடுத்தது பருத்தி
அல்லல்லோ
"எரிக்கும் தீ"
விரல் பிடித்து ஒன்றும் நடத்தியல்லல்லோ
என்னை தெருவில் தனியே நிறுத்தி
தெருவில் பசியில் இறந்த இளம் மனசுகள்
விளை நிலங்களாய் மாறும் அல்லவோ
"பல தலைமுறைகளின்" காதில் கவிதைகளோடு விதிகளையும் மாற்றுமல்லோ
வேடன் ( கிரண் தாஸ் முரளி )
எதுகையொடு மோனை இணைந்ததமிழ் தேன்காண்
உதகைமேல் நிலாபோல் உலாவுக் குளிர்பண்
அதிகாலை சூரியன் ; அந்தியில்நீ வேடன்!
சதிஉலுக்கி சாதிமதம் சாய்த்தநம்அம் பேத்கர்
மதியாய் ஒளிர்திட்டாய் வாழ்க!
வினாமேல் வினாஎய் விடை ? பதரே! ஓதும்
சனாதனஆன் மீகஊழல் சாதிசூதுக் குற்றம்
எனான்...மத பெய்யன் இறைநம் பிக்கை
கனாஅன்ன கற்பனை காணல்நீர் நேர்மை
குணமிலாவன் தேறி-கள்வர் கொள்கை!
வேற்றுமைகுள் வேற்றுமை வெள்ளெருக்கு நஞ்சுஅன்ன
நாட்டுக்குள் நாட்டாண்மை சூத்திரசீழ் சாதிகள்
கூட்டுக்குள் கொள்ளை கருவறைஆன் மீகமதம்
தீட்டுக்கு(ள்) தீண்டாமை நாம(ம்) சனாதனநூல்
கேட்டுக்குள் கேடுமயிர் யாவும்காண் வேடா! உன்
பாட்டுள்தான் பாழ்படட்டும் வீழ்த்து!
பார்வையிடுவேடனுக்கு... திராவிட அன்னை தமிழ் வாழ்த்து பா... பூமாலை! (மாலை - 2)
க ருத்துகள்