காதலா காதலா காதலால் தவிக்கிறேன்!

           


 உலாவிடும் காற்றுக்கு உடலம்-பூ(மி);உயிர்?சுழலும்                               காந்தபுவி ஈர்ப்பு!

 துளாவிடும் முகில்களுக்கு தேகம் தூய மழைபொழிவு!                           உயிர்?புவி ஆவி! 

அலாவிடும் திராவிடத்துக்கு உடல்-மொழி தொல்தமிழ்;                             உயிர்கொடி? உணர்வு! 

பலாஇசை யோகசிறீ பண்குரல் அங்கம் புகழ்;உயிர்?                                   வாழ்க! ZEEதமிழ் சுரங்கம்!

பூமியின் உள்ளிருந்து...                                                                                                                வெளிப்படும் கதகதப்பு;                                                        ஞாலம்சுவாசிக்கின்றது...                                                                     என்று மகிழ்கின்ற நினைப்பு!

அதனால்...காதல்என்பது                                                                                காற்றுப் போன்றது! (கிரகங்களில்)                                                                                    பூமி மட்டுமே...சுவாசிக்கின்றது!

உலகம் நிலைக்கும் வரை,
காற்றும் சுழலுமே!
மானுடம் உள்ளளவும்...   (வாழைஅடி வாழையாய்)
காதல் வாழுமே!

கரியமிளவாயு,
காற்றுள் உள்ளது!
காதலுள்...
ஆக்சிசனைத் துன்புறுத்தும்,
வேற்றுமை...
மனநோய் ஆகிற்று!

வாழ்க்கை என்பது...
ஆக்சிசன் போன்றது!
காற்றுநீர்நெருப்பு,                                                                                                       உயிரிகள்...
அனைத்துக்குமே,
தேவை ஆகிற்று!

உப்பு என்பது உறவு...
ஆயிற்று!
இதில்கரிப்பு என்பது...
புறக்கணிப்பு ஆகிற்று!

அன்பு என்பது...
கரும்பு போன்றது!
அதில் இனிப்பு  என்பது,
அதன் நெருக்கம் ஆனது!

பிரிவு என்பது,
காதலை முறிப்பது!
வாழ்க்கை வயலிலே...
காயும் பயிர்மண் ஆவது!


Comments

Popular posts from this blog

வானுள் நிலாஒளிர்வாய் 'ZEE தமிழ்'அரங்குள் யோகசிறீ தாரகை...

கும்பமேளா வைரல் மோனலிசா கதாநாயகியாக அறிமுகம் | Monalisa | Kumbh mela

ஒரு கலைமகளின் - யோகஸ்ரீ... ஏணிப்படிகள்!