வெல்லத் தமிழொடு விண்தொடு கற்பனை...
Ramu Ramu
எதுவோ ஆதாரம்? தமிழே!
வெல்லத் தமிழொடு விண்தொடு கற்பனைத்...
துள்ளக் கருவெடு சொல்லுள் இறுக்கிஉன்...
கல்வி முனைமீது காயம் சுழலநீ...
சொல்,சொல்; கவிதைச் சுரக்கும்!
வெல்லத் தமிழொடு விண்தொடு கற்பனைத்...
துள்ளக் கருவெடு சொல்லுள் இறுக்கிஉன்...
கல்வி முனைமீது காயம் சுழலநீ...
சொல்,சொல்; கவிதைச் சுரக்கும்!
உயிரும் உறவும் உடலும் உடையும்
வயி(ற்)றை நிரவும் வயலும் மணியும்
அணுவும் துணையும் அசைவும் இசையும்
தினம்என்வாய் தீண்டும் தமிழே!
வயி(ற்)றை நிரவும் வயலும் மணியும்
அணுவும் துணையும் அசைவும் இசையும்
தினம்என்வாய் தீண்டும் தமிழே!
பனிப்பட அசையும் பாசக் கொடியாய்
தனிமையில் காற்றொடு தலையசை வயலாய்
கனவுக்குள் நிலைத்த கனிகை நினைவாய்
எனக்குள் இனிப்பது எப்போதும் தமிழே!
தனிமையில் காற்றொடு தலையசை வயலாய்
கனவுக்குள் நிலைத்த கனிகை நினைவாய்
எனக்குள் இனிப்பது எப்போதும் தமிழே!
அவளின் முகமா? அசையும் இதழா?
உவகை நிலவா? உதிர்க்கும் ஒளியா?
தவழும் முகிலா? தளிர்மின்னற் பாய்வா?
எதுவாம் எழிலோ? தமிழே!
உவகை நிலவா? உதிர்க்கும் ஒளியா?
தவழும் முகிலா? தளிர்மின்னற் பாய்வா?
எதுவாம் எழிலோ? தமிழே!
தயிரோவெண் ணெய்க்கு,வான் தண்ணீர்
வயலுக்கு;
உயிரோ இணையும் உடற்கு -
மயிலே!
எயிரைக்காண் பல்போல் இசைக்கும்
தமிழ்தான்...
குயிலுக்(கு), ஒயிலுக்(கு)ஆ தாரம்!
வயலுக்கு;
உயிரோ இணையும் உடற்கு -
மயிலே!
எயிரைக்காண் பல்போல் இசைக்கும்
தமிழ்தான்...
குயிலுக்(கு), ஒயிலுக்(கு)ஆ தாரம்!
மீன்முட்டும் அலைதொட்டு நதிகள் நகரும்;
காண்எட்டு திசைசென்றென் கவிதை சுழலும்; (நான்)
தேன்சொட்டும் தமிழுண்டு தினமும் வளர்ந்தேன்!
Continue:
Posted 15th November 2014 by Willswords M
சொடுக்கு:
என்ன இதுதூ... இந்திஅன்ன அவ்வைபெயரில் கள்ளசாதி பாடல்!
Posted 15th November 2014 by Willswords M
சொடுக்கு:
என்ன இதுதூ... இந்திஅன்ன அவ்வைபெயரில் கள்ளசாதி பாடல்!
நவம்பர் .26 ல்
ஒட்டுமொத்த நாடும்
கையேந்திய தினம்
இன்று...........
அன்பார்ந்த தோழர்களே,
என் உயிரின் உயிரான
விடுதலைச் சிறுத்தைகளே வணக்கம்.
அரசமைப்புச் சட்டநாளான
காலை 10.00 மணி முதல்
12.00 மணிக்குள்ளாக..
அல்லது
மாலை 4.00 மணி முதல் 6.00 மணிக்குள்ளாக..
முன்னணி தோழர்கள் யாவரும் தவறாமல் கட்சி அலுவலகம் அல்லது ஏதேனும் ஒரு பொது இடத்தில் ஒன்றுகூடி கீழ்க்காணும் உறுதிமொழியை ஏற்கவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
உறுதிமொழி
-------------------------------
மாமனிதர் புரட்சியாளர்
அம்பேத்கர் அவர்களின்
அளப்பரிய பேருழைப்பால்
வடித்து வகுத்தளிக்கப்பெற்ற இந்திய அரசமைப்புச் சட்டம் அரங்கேற்றப்பட்ட நாளான
நவம்பர் 26 இன்று --
அச்சட்டத்தின் அடிப்படைக் கூறுகளான " நீதி, சுதந்திரம், சமத்துவம் , சகோதரத்துவம் " ஆகியவற்றை நீர்த்துப் போகாமல் பாதுகாத்திடவும் --
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் கண்ட கனவை நனவாக்கும் வகையில், பிறப்பினடிப்படையிலான உயர்வு- தாழ்வு என்னும் சனாதன பாகுபாடுகள் இல்லாத,
ஒரு புதிய சனநாயக இந்தியாவைக் கட்டமைத்திடவும் --
உளப்பூர்வமாக உறுதியேற்கிறோம்.
அரசமைப்புச் சட்டம் என்னும் அம்பேத்கர் சட்டமானது, மனுஸ்மிருதி என்னும் மனுச்சட்டத்திற்கு நேர் எதிரானதாகும்.
எனவே, அம்பேத்கர் சட்டத்திற்கு இன்று மனுவாத சக்திகளால் பேராபத்து சூழ்ந்துள்ளது.
மிகப்பெரும் கேடான இச்சூழலிலிருந்து அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதே
புதிய சமத்துவ இந்தியாவைக் கட்டமைப்பதற்கான ஒரே வழியாகும்.
அதற்கு இந்திய அளவில்,
சனாதன சக்திகளைத் தனிமைப் படுத்தவும்; சனநாயக சக்திகளை அய்க்கியப்படுத்தவும்,
வரலாற்றுச் சிறப்பு மிக்க
இந்நாளில் உறுதியேற்கிறோம்.
---@@@@@@@----
# இவ்வுறுதிமொழியை ஒருவர் கூற மற்றவர்கள் திரும்பக்கூறிட வேண்டும்.
# ஒன்றியம், நகரம், பேரூர், வார்டுகள் வாரியாக ஆங்காங்கே ஒன்றுகூடுதல் வேண்டும்.
# கட்சியின் கொடித்துண்டு (மஃப்ளர்) அணிந்து கொண்டு வரிசையாக நிற்க வேண்டும்.
# மாவட்ட, மாநிலப் பொறுப்பாளர்கள் ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் வார்டு பொறுப்பாளர்களுக்கு வழிகாட்டுதல் வேண்டும்.
Thol Thirumavalavan Mu Arivudainambi கடலூர் வடக்கு மாவட்டம் #வீ_அம்பேத்கார்தாசன் விசிக முகாம் துணை செயலாளர் சுந்தரவாண்டி VelichamTv

Comments
Post a Comment