வானுள் நிலாஒளிர்வாய் 'ZEE தமிழ்'அரங்குள் யோகசிறீ தாரகை...



வானுள்  நிலாஒளிர் வாய்...தூவ, 'பூ' கிறங்க;
தேனுள் இசைசுவை தென்றல் இதென-ZEE
தமிழ்அரங்குள் யோகசிறீ   தாரகை சொலித்தாள் 
அமிழ்தபண் ஆகாயம் தொட்டு.

ஆகம தடைதாண்டி அற்புத தேன்இசை
மேகங்கள் தீண்டி மெளனம்பொழி மின்நிலவு
ஆகாயம் நாணும் அதிசய பண்தமிழே  
யோகசிரி உன்பாஎன் வெண்பா!

காண்உள்ஓர் பூமேல் கவிழ்கரு வண்டுநோக்கி
மான்உள் முயங்கும் மயங்கும் விழிஅந்த
தேன்உள் உலாவும் திரண்ட கனிஇசைஉன்
ஊண்குரல் ஒன்ற தமிழ்!


யோக ஸ்ரீ கருர் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்காங்க அங்க இருக்க கூடிய ஒரு அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறாங்க. அப்பா டைல்ஸ் ஓட்டும் வேலை அம்மா பஞ்சுமில்ல வேலை மூன்று பெண் குழந்தை ஒரு ஆண் ஆண் குழந்த குடும்பத்தின் முதல் குழந்தை இவர்...

இரண்டாம் வகுப்பு படிக்கும் போது இவரின் குரல் வளத்தை அறிந்த பள்ளி ஆசிரியர் இந்த பொண்ணுக்கு பயற்சி அளித்து இன்று Zதமிழ் சரிகமபவில் வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளார்.

ஒரு ஆசிரியர் என்பதையும் தாண்டி ஒரு மாணவியின் தனித் திறமைக்காகவும் சேர்த்து போராடி உள்ளார்.

வெற்றி தோல்வி என்பது பிறகு இத்தனை ஆண்டுகள் உடன் வழிகாட்டி பயணிப்பது என்பது அறிது.

இது மாதிரியான ஆசிரியர்களை பார்க்கும் போது வணங்க தோன்றுகிறது. அந்த பெண் பாடும் போது இந்த ஆசிரியர் கண்ணில் நீர் கசிகின்றது அதில் தெரிகிறது அந்த மாணவி மேல அந்த ஆசிரியரின் அக்கறை.

ஆசிரியை பெயர் மகேஸ்வரி.

மகேஸ்வரி டீச்சருக்கு என் வாழ்த்துகள்.


ragupathiboominathan - Face book

மகிழும் திராவிட அன்னை தமிழ் சங்கம்!: ஒரு கலைமகளின் - யோகஸ்ரீ... ஏணிப்படிகள்! https://wiiisindias.blogspot.com/2025/06/blog-post.html?spref=tw


வெல்லத் தமிழொடு விண்தொடு கற்பனைத்... 
துள்ளக் கருவெடு சொல்லுள் இறுக்கிஉன்... 
கல்வி முனைமீது காயம் சுழலநீ... 
சொல்,சொல்; கவிதைச் சுரக்கும்!  

உயிரும் உறவும் உடலும் உடையும் 
வயி(ற்)றை நிரவும் வயலும் மணியும் 
அணுவும் துணையும் அசைவும் இசையும் 
தினம்என்வாய் தீண்டும் தமிழே! 

பனிப்பட அசையும் பாசக் கொடியாய் 
தனிமையில் காற்றொடு தலையசை வயலாய் 
கனவுக்குள் நிலைத்த கனிகை நினைவாய் எனக்குள் 
இனிப்பது எப்போதும் தமிழே! 

தயிரோவெண் ணெய்க்கு,வான் தண்ணீர்  
வயலுக்கு; உயிரோ இணையும் உடற்கு -  மயிலே!  
எயிரைக்காண் பல்போல் இசைக்கும்  தமிழ்தான்... 
குயிலுக்(கு), ஒயிலுக்(கு)உன் குரலுக்கும்  ஆதாரம்! 

வான் தட்டும் மழைஉண்டு வனங்கள் உயரும்; 
மீன்முட்டும் அலைதொட்டு நதிகள் நகரும்; 
காண்எட்டு திசைசென்றென் கவிதை சுழலும்; (நான்) 
தேன்சொட்டும் தமிழுண்டு தினமும் வளர்ந்தேன்!
  
உகர உயிர்மெய் எழுத்தொடு 
நுகரஓர்...
உயிரெழுத்து;
பகரப் படுவது(ம்) உயிர்மெய் எழுத்தே!
அவ்விதமே...

நிகழஉறவு நம்பிள்ளைக்கு முதல்எழுத்...
தாய் நிலைப்பதும்,
புகழப்படுவதும்; நின்பெயரே... என்று;
புன்னகைத்து நாணும்...

அன்னைப்போல், செம்மொழியால் யார்...
கலைஞர்/பாடகர் ஆனாலும்...
விம்ம நெஞ்சம்முன் மொழிவதெது?
விண்வருடும் தாய்தமிழே!


காவிய டிரம் சோலோ உலகின் சிறந்த சாம்பியன்
ஷிப்புடன் லிடியன் ஆச்சரியப்படுத்தினார்!

Comments

Popular posts from this blog

கும்பமேளா வைரல் மோனலிசா கதாநாயகியாக அறிமுகம் | Monalisa | Kumbh mela

ஒரு கலைமகளின் - யோகஸ்ரீ... ஏணிப்படிகள்!